கோலாகலமாக நடந்த சின்னத்திரை ஜோடிகளின் திருமணம்
ADDED : 1537 days ago
ராஜ் தொலைக்காட்சி தற்போது புது நிகழ்ச்சிகள், புதிய சீரியல்கள் ஆன புதுப்பொலிவுடன் ஜொலித்து வருகிறது. அந்த வகையில் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ வருவாய் என்ற தொடர் மக்களின் பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. இத்தொடரில் நடித்து வரும் வினோத் குமார் மற்றும் யாழினி காதலித்து வந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் அவர்களது திருமணம் கோலாகலமான முறையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. ரீலில் ஜோடியாக நடித்து ரியலில் ஜோடியாக மாறுபவர்கள் லிஸ்டில் இடம் பிடித்த வினோத் - யாழினி ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.