உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலரை கரம்பிடித்த சீரியல் நடிகை

காதலரை கரம்பிடித்த சீரியல் நடிகை

ஜீ தமிழின் முக்கிய சீரியல்களின் ஒன்றான செம்பருத்தி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஷபானா. இந்த தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஷபானா, விஜய் டிவி நடிகரான ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். சமீபத்தில் இருவரும் தங்கள் காதல் கதை குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் ஷபானா - ஆர்யன் ஜோடியின் திருமணம் நண்பர்களும் உற்றார் உறவினர்களும் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திருமண வைபவத்தில் சின்னத்திரையின் சக நடிகர்களான அக்னி, ரேஷ்மா உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருவதையடுத்து ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !