100வது நாள் போஸ்டரை வெளியிட்ட 'டியூட்'
அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், அறிமுக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு 2025 அக்டோபர் 17ம் தேதி வெளியான படம் 'டியூட்'. இன்றைய இளம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்த இப்படம் வெளியான ஒரு வாரத்திற்குள் 100 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
படம் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடி தளத்திலும் வெளியானது. அதிலும் அதிகப் பார்வைகளைப் பெற்ற ஒரு படமாக இருந்தது. தற்போது எந்தத் தியேட்டரிலும் இப்படம் ஓடவில்லை. இருந்தாலும் படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆவதால் தயாரிப்பு நிறுவனம் 100வது நாள் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
டியூட் எப்போதும் நேசிக்கப்படுகிறது, டியூட் எப்போதும் கொண்டாடப்படுகிறது, டியூடிஸத்தின் 100வது பிளாக்பஸ்டர் நாள் என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வந்த படங்களில், 'லவ் டுடே, டிராகன்' படங்கள் 100 கோடி வசூலித்தன. அடுத்து 'டியூட்' படமும் 100 கோடி வசூலித்து ஹாட்ரிக் 100 கோடி நாயகன் என்ற பெருமையை பெற்றுத் தந்தது.