நாய் சேகருடன் இணையும் ரெடின் கிங்ஸ்லி
வளர்ந்து வரும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. வடிவேலு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சீரியசான வேலைகளை செய்து சிரிக்க வைக்கிறவர், ரெடின் கிங்ஸ்லி அதற்கு நேரெதிரானவர் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு அப்பாவியான வேலைகளை செய்து சிரிக்க வைக்கிறவர். கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் ஓடிடியில் வெளியான நவரசாவில் கவனிக்கப்பட்டார். சமீபத்தில் வெளியான டாக்டர், அண்ணாத்த படங்களின் மூலம் அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார்.
இப்போது அவர் வடிவேலு ரீ என்ட்ரி கொடுக்கும் நாய் சேகர் படத்தில் வடிவேலுவுடன் நடிக்கிறார். படம் முழுக்க அவருடன் வருகிற மாதிரியான கேரக்டர் என்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெடின் கிங்ஸ்லியை தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டி இருக்கிறார் வடிவேலு. ரெடின் கிங்ஸ்லி இப்போது நடிப்பில் பிசியாகி விட்டார். முன்னணி ஹீரோக்கள்கூட தங்கள் படங்களுக்கு அவரை விரும்பத் தொடங்கி இருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி ரெடின் கிங்ஸ்லி கையில் 7 படங்கள் வரை இருக்கிறது.