ராதேஷ்யாம் முதல் பாடல் திங்களன்று வெளியாகிறது
ADDED : 1422 days ago
பாகுபலி-2விற்கு பிறகு பிரபாஸ் நடித்து வெளியான சாஹோ படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ராதே ஷ்யாம் வருகிற ஜனவரி 14ந்தேதி வெளியாகிறது. பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் நவம்பர் 15-ந்தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.