செல்ல நாய்க்குட்டி உடன் இனிமை பாடலுக்கு ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்!
ADDED : 1412 days ago
அண்ணாத்த, சாணிக்காயிதம் படங்களை தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவி, மோகன் பாபு போன்ற பிரபல நடிகர்களின் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் மரைக்காயர் படத்தை அடுத்து வாஷி என்ற படத்தில் டோவினோ தோமஸ்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது செல்ல நாய்குட்டி உடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட போட்டோக்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது விஷால் நடித்து வெளியான எனிமி படத்தில் இடம் பெற்ற இனிமை என்ற பாடலுக்கு தனது செல்ல நாயுடன் இணைந்து நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ள ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.