ஆர்.கே.சுரேஷின் கோட்டை முனி
ADDED : 1413 days ago
ட்ரீம் லைட் பிக்சர்ஸ் சார்பாக சிங்கப்பூர் என்.ஹபீப் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் கோட்டைமுனி. புதுமுக இயக்குனரான ந.இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
1980களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் வாழ்ந்த கோட்டை முனி என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. இலங்கை - தனுஷ்கோடி பகுதிக்கு இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்திய கேங்ஸ்டர் கதையில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார்.
சைத்தான் படத்தில் நடித்த அருந்ததி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன், ஷரவணசக்தி, ராஜசிம்மன், நிழல்கள் ரவி, சச்சு, தாமு, முத்துராமன், முத்துக்காளை, திருமுருகன், உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவில், எம்.எஸ்.பாண்டியன் இசையமைக்கும் இப்படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.