விமலின் புதிய படம்
ADDED : 1413 days ago
இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கும் புதிய படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். குடும்ப உறவுகளை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விமலின் தந்தையாக பாண்டியராஜன் நடிக்கிறார். சகோதரியாக அனிதா சம்பத் நடிக்கிறார்.
தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.