உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மறுபிறவி, இயற்கை பாதுகாப்பை மையப்படுத்தியுள்ள வனம்

மறுபிறவி, இயற்கை பாதுகாப்பை மையப்படுத்தியுள்ள வனம்

அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வனம். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரான் ஈத்தன் யோகன் இசையமைத்துள்ளார்.

மறுபிறவியை அடிப்படையாக கொண்டு பேண்டஸி திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் குறித்து இயக்குனர் ஸ்ரீகண்டன் கூறுகையில், ‛இயற்கையை நாம் அழித்தால் அது நம்மை ஒரு நாள் அழிக்கும் என்பதை இப்படம் விளக்கும். மறுபிறவி, இயற்கை பாதுகாப்பு இரண்டு விஷயத்தையும் மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளோம். படத்தை தியேட்டரில் டிசம்பர் மாதம் வெளியிடுகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !