உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சசிகுமார் நடிக்கும் ‛அயோத்தி' படம் ஆரம்பம்

சசிகுமார் நடிக்கும் ‛அயோத்தி' படம் ஆரம்பம்

சுப்ரமணியபுரம் படம் மூலம் நடிகர், இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அடுத்து தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். தற்போது தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தீபாவளிக்கு அவரது எம்ஜிஆர் மகன் ஓடிடியில் வெளியானது.

அடுத்து சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ் பால் சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 22) முதல் பூஜையுடன் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கிறது. 45 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பட அறிவிப்புடன் சசிகுமார் படு ஸ்டைலிஷாக இருக்கும் படங்களும் வெளியிட்டுள்ளனர். என்ஆர்.ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார்.

‛‛எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. கதையை கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இந்த படத்திற்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது'' என்றார் இயக்குனர் மந்திர மூர்த்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !