நடிகர்களான தந்தைமார்
ADDED : 1410 days ago
தினேஷ் லஷ்மணன் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேனஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படம் க்ரைம் த்ரில்லர் பாணியில், தந்தை, மகன் உறவை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் ஜி.கே.ரெட்டி, அர்ஜுனின் தந்தையாக நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் 2ம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.