தந்தையான பிக்பாஸ் ஆரவ்
ADDED : 1468 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ‛மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், ராஜபீமா' படங்களில் நடித்தார். இவற்றில் ராஜபீமா படம் இன்னும் வெளியாகவில்லை. கடந்தாண்டு தன் நீண்ட நாள் காதலியும், நடிகையுமான ராஹியை ஆரவ் திருமணம் செய்தார். இந்நிலையில் ஆரவ் - ராஹி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தந்தையான ஆரவ்வுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.