வீடியோ எடுக்கும்போது தவறி கீழே விழுந்த ஸ்ரேயா
ADDED : 1412 days ago
2018ல் ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, அதன்பிறகு ஸ்பெயின் நாட்டில் குடியேறினார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தின் போது தனக்கு குழந்தை பிறந்ததாக 6 மாதங்கள் கழித்து சோசியல் மீடியாவில் தெரிவித்த ஸ்ரேயா, அதன்பிறகு தனது மகளுக்கு ராதா என்று பெயர் வைத்திருப்பதாகவும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து குழந்தையுடன் நேரத்தை செலவிடும் பல போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும், தன்னைப்பற்றிய தகவல்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ஸ்ரேயா, தற்போது ஒரு வீடியோவை எடுத்தபடியே பேசிக்கொண்டே வருகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். அந்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் கவனம் தேவை என அறிவுரை செய்துள்ளனர்.