உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் 66 - இப்போதே வியாபாரம் தொடங்கியது

விஜய் 66 - இப்போதே வியாபாரம் தொடங்கியது

நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66ஆவது படத்தில் நடிக்கிறார். தில்ராஜூ தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. விஜய் தவிர்த்து மற்ற நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்னமும் தொடங்கப்படாத இந்த படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை வாங்க ஜீ நெட்வொர்க் என்ற நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் தான் இதே தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !