பாவனாவை தமிழில் நடிக்க வைக்க முயற்சி
ADDED : 1412 days ago
கேரளாவைச் சேர்ந்த நடிகை பாவனா, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ளார். கன்னடப் படங்களில் நடித்தபோது, கன்னடத் தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனைக் காதலித்தார்.
ஐந்து ஆண்டு காதலுக்கு பின்னர் நவீன், பாவனா கடந்த 2018ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்கிறார். சமீபகாலமாக சமூகவலைதளத்தில் தன்னை பல்வேறு உடை அலங்காரத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்ளுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
தற்போது கோவிந்தா கோவிந்தா என்ற கன்னட படத்தில் பாவனா நடித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து பாவனாவை தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்கிறார்கள்.