உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பா நலமுடன் இருக்கிறார் - கமல் மகள் ஸ்ருதிஹாசன்

அப்பா நலமுடன் இருக்கிறார் - கமல் மகள் ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசன் கதர் துணி நிறுவனத்தின் அறிமுகத்திற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பியபோது லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் கமலுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கமல் பூரண குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கமல் நலம்பெற வேண்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். அதில் எனது தந்தையின் ஆரோக்கியத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவித்த மற்றும் பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. அவர் நலமுடன் இருக்கிறார், விரைவில் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !