உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாநாடு - பாராட்டிய ரஜினி : படக்குழு மகிழ்ச்சி

மாநாடு - பாராட்டிய ரஜினி : படக்குழு மகிழ்ச்சி

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள மாநாடு படம் கடந்த 25ந் தேதி பெரும் போராட்டத்துக்கு பிறகு வெளிவந்தது. விமர்சனங்களும் பெரும்பாலும் பாராட்டியே வந்துள்ளதால் அடாத மழையிலும் படம் வசூலை குவிப்பதாக கூறப்படுகிறது. சிம்பு உடம்பை குறைத்து, அடக்கி வாசித்து, பன்ஞ் டயலாக் எதுவும் பேசாமல் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்திருப்பதால் படம் எல்லோருக்கும் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு படங்களிலேயே இந்த படம்தான் அதிகம் வசூலிப்பதாக விநியோகஸ்தர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து படக் குழுவினர் வெற்றியை கொண்டாடி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவுக்கு கேக் ஊட்டி மகிழும் படங்கள் இப்போது சமூக வலைத்தளத்தில் சிம்பு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரஜினி பாராட்டு
இதனிடையே மாநாடு படத்தை பார்த்துவிட்டு நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினரை போனில் அழைத்து பாராட்டி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதுகுறித்து தங்களின் மகிழ்ச்சியான பதிவுகளை சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, வெங்கட்பிரபு ஆகியோர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !