ஹிந்தி படப்பிடிப்பில் மாளவிகா மோகனன் காயம்
ADDED : 1493 days ago
ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய் ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக 'மாறன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது ஹிந்தியில் ரவி உட்யவார் இயக்கத்தில் சித்தான்ட் சதுர்வேதி நாயகனாக நடிக்கும் 'யுத்ரா' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா.
இப்படத்தின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பில் நடித்த போது மாளவிகாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து, “நீங்கள் ஒரு ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது, காயங்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு தான் லேசான கீறல்களாக உணர முடியும்,” எனப் பதிவிட்டு காயமடைந்த தனது கையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மாளவிகா பொதுவாக தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகமான கிளாமர் புகைப்படங்களைத்தான் பகிர்வார். காயமடைந்த இந்த புகைப்படப் பதிவிற்கம் கூட இரண்டு லட்சம் ரசிகர்கள் லைக் போட்டுள்ளார்கள், பழக்க தோஷம் போல..