சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்!
ADDED : 4 minutes ago
‛செல்பி' பட இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'மண்டாடி'. ஆர்.எஸ். எண்போடெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தை முழுக்க முழுக்க கடலில் பெரும் பொருட்செலவில் உருவாக்கி வருகின்றனர். தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ‛ஆவேசம், டூரிஸ்ட் பேமிலி' படங்களின் மூலம் பிரபலமான மிதுன் ஜெய்சங்கர் இணைந்து நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.