அடாது மழையிலும் விடாமல் டப்பிங் செய்த சாக்சி அகர்வால்
ADDED : 1459 days ago
காலா, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்த சாக்சி அகர்வால், தற்போது ரங்கா புவனேஸ்வர் எழுதி இயக்கும், ‛தி நைட்' படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தின் டப்பிங்கை சென்னை, சாலிகிராமத்தில் நடிகை சாக்சி அகர்வால் சமீபத்தில் தொடங்கினார்.
சாலையில் தேங்கிய மழைநீரில் தத்தளித்தபடி இயக்குனர் மற்றும் கேமராமேன் உதவியுடன் சென்ற சாக்சி கூறுகையில், ‛மழை, சென்னை நகரை புரட்டி போடுகிறது. ஆனாலும் வேலை தொடர்கிறது. வேலைக்காக எதுவும் செய்யலாம்' எனக்கூறியுள்ளார்.