உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பாபா' படத்தினால் மாறிய 'பகவதி' பட கிளைமாக்ஸ்!

'பாபா' படத்தினால் மாறிய 'பகவதி' பட கிளைமாக்ஸ்!


இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தமிழில் 'ஏய், பகவதி, தம், குத்து, செல்வா, வாத்தியார்' உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கியவர். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகவதி படத்தை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, ''பகவதி படத்தில் முதல்வர் கதாபாத்திரம் இடைத்தேர்தலில் நிற்குமாறு கூப்பிட, பகவதி கதாபாத்திரம் இல்லை, வேண்டாம் என மறுத்து விடுவார். ஆனால், முதலில் கதையில் அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வர் ஆக பதவியேற்கும் சூழல் வருவது போன்று தான் எழுதி இருந்தேன். அப்போது பகவதி படப்பிடிப்பு காலகட்டத்தில் 'பாபா' படம் வெளியானது, அந்தப் படத்தின் இறுதியில் ஏழாவது மந்திரத்தை முதல்வர் ஆகுவதற்கு ரஜினி உபயோகிப்பார் என ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் அதை பயன்படுத்தமாட்டார்.

ரஜினி சாரே இதை மறுக்கிறார், விஜய்யே இப்போது தான் ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து வருகிறார். இதில் முதல்வர் ஆகுவது போன்ற காட்சி வைத்தால் அது ஓவர்டோஸ் ஆகிவிடுமோ என்கிற பயம் உருவானது. இது குறித்து விஜய் சாரிடம் கூறினேன். 'கதையில் சொன்னீங்க? இப்போ வந்து மாத்துறீங்க' என்று அவர் முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை. முழு ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகு அடுத்தகட்டமாக இதை பண்ணலாம் என அவரை சமாதானம் செய்தேன். என்று ஏ. வெங்கடேஷ் அளித்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !