காமெடி நடிகருக்கு ஜோடியான அபர்ணா பாலமுரளி
ADDED : 1411 days ago
மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. தமிழில் எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது. அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தது.
அதன்பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடுவார் என பார்த்தால், தற்போது மலையாளத்தில் காமெடி நடிகரான நீரஜ் மாதவ் என்பவருக்கு ஜோடியாக சுந்தரி கார்டன்ஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார் அபர்ணா பாலமுரளி. டான்சராக இருந்து நடிகராக மாறிய நீரஜ் மாதவ் தொடர்ந்து பல காமெடி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாகவும் இவர் நடித்து வருகிறார்.