உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள படத்திற்கு பாடல் எழுதும் விவேகா

மலையாள படத்திற்கு பாடல் எழுதும் விவேகா

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி பாடலசிரியாக வலம் வருபவர் விவேகா. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதியுள்ள இவர், அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடலான அண்ணாத்த அண்ணாத்த பாடலையும் இவர் தான் எழுதியிருந்தார்.

இந்தநிலையில் முதன்முதலாக மலையாள படம் ஒன்றில் பாடல் எழுதியுள்ளார். பிரீசர் நம்பர் ஒன் என்கிற கிரைம் த்ரில்லர் படமான இது மலையாளத்தில் உருவானாலும் கூட இதிலும் தமிழில் தான் பாடல் எழுதியுள்ளார் விவேகா. காரணம் தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் நடக்கும் போலீசாரின் புலன் விசாரணை காட்சிகளின் பின்னணியில் இடம் பெறும் பாடல் என்பதால் அதை தமிழிலேயே எழுதித்தர சொல்லிவிட்டார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !