டிச.,24ல் ரைட்டர் ரிலீஸ்
ADDED : 1399 days ago
சமுத்திரகனி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வருகின்றன. இவர் நடித்த சித்திரை செவ்வானம் படம் இன்று(டிச., 3) ஓடிடியில் வெளியானது. அடுத்தப்படியாக ரைட்டர் படம் டிச., 24ல் ரிலீஸாக உள்ளது. பிராங்களின் ஜோசப் இயக்கி உள்ள இந்த படத்தில் சமுத்திர கனி உடன் ஹரி கிருஷ்ணன், இனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தில் போலீஸில் பணியாற்றும் ரைட்டர் வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். வழக்கமான சமுத்திரகனியை இந்த படத்தில் பார்க்க முடியாது, அவரை வேறுமாதிரி பார்க்கலாம் என்கிறார் இயக்குனர்.