நயன்தாரா படம் ; அல்போன்ஸ் புத்ரன் விடுத்த எச்சரிக்கை
ADDED : 1424 days ago
நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் மிகப்பெரிய ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்தார் இந்தநிலையில், பிரித்விராஜ், நயன்தாராவை இணைத்து கோல்டு என்கிற படத்தை இயக்கி முடித்துள்ள அல்போன்ஸ் புத்ரன், தற்போது அந்த படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த படம் நேரமும் பிரேமமும் போல இல்லை. இது வேற மாதிரி படம்.. நிறைய நல்ல கதாபாத்திரங்கள், சில நல்ல நடிகர்கள், இரண்டு மூன்று பாடல்கள், நிறைய நகைச்சுவைகள் கொண்ட எனது மூன்றாவது திரைப்படம். வழக்கம் போல ஒரு எச்சரிக்கை! போரையும் பாசத்தையும் எதிர்பார்த்து யாரும் அந்த பக்கம் வரக்கூடாது” என கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.