சமந்தாவின் யசோதா ஆரம்பம்
ADDED : 1431 days ago
திருமண வாழ்க்கை கசந்த பிறகு சினிமாவில் முழு கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார் நடிகை சமந்தா. இதனால் அவருகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் படங்களில் நடித்து முடித்து விட்டார். இதன் பிறகு ஹிந்தியில் ஒரு படம், வெப்சீரிஸ் மற்றும் சர்வதேச படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகும் ‛யசோதா' என்ற படத்தில் நடிக்கிறார். ஹரி - ஹரீஷ் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(டிச., 6) துவங்கியது.