உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நள்ளிரவு 12 மணிக்கு ரஜினிக்கு பிறந்தநாள் கொண்டாடிய ரசிகர்கள்!

நள்ளிரவு 12 மணிக்கு ரஜினிக்கு பிறந்தநாள் கொண்டாடிய ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்துக்கு டிசம்பர் 12-ம் தேதியான இன்று 71வது பிறந்த நாள் ஆகும். அதையடுத்து அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள ரஜினி ரசிகர்களும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் ரஜினியின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். அதேபோல் நேற்று இரவும் 12 மணி அளவில் ரஜினியின் வீட்டு முன்பு கூடிய அவரது ரசிகர்கள் கேக் வெட்டி அவரது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதோடு வெளியில் நின்ற படியே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் கூறியிருக்கிறார்கள். இதுகுறித்த வீடியோ, போட்டோக்களை சோசியல் மீடியாவிலும் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !