உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு முடிந்தது!

விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு முடிந்தது!

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதையடுத்து பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காகவும் பீஸ்ட் படக்குழு ஜார்ஜியா செல்லப்போவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நேற்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பீஸ்ட் கடைசி நாள் படப்பிடிப்பின் போது டைரக்டர் நெல்சன் திலீப்குமாரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார் விஜய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !