கவுதம்மேனனின் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வீடியோ!
ADDED : 1399 days ago
சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வரும் கவுதம்மேனன், தற்போது கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இயக்கி வெளியிட்டுள்ளார். தடுப்பூசி போடுவோம் உலகினை மாற்று வோம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வீடியோவின் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
அதோடு சிவகார்த்திகேயன், ஜீவா, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன், கலையரசன், காளிதாஸ் ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். நேற்று இந்த வீடியோ வெளியானது.