வடிவேலுடன் இணைந்த சிவாங்கி
ADDED : 1390 days ago
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு தனது இனிமையான குரலால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் சிவாங்கி. தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன் சுட்டித்தனத்தால் மேலும் பிரபலமானார். விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது அவர், வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சிவாங்கி, 'நாய் சேகர் படத்தில் வடிவேலு சாருடன் நடிப்பது மிகவும் மிகழ்ச்சி, உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும்' என கூறியுள்ளார்.