சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா
ADDED : 1403 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளா வனிதா விஜயகுமார். தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், பிசினஸிலும் இறங்கி கலக்கி வருகிறார். இந்நிலையில் அவர் சின்னத்திரை தொடரிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'திருமதி. ஹிட்லர்' என்ற தொடரில் வனிதா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். சீரியலில் கதாநாயகன் ஏ.ஜே வைக்கும் சமையல் போட்டியில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். தற்போது ஒளிபரப்பாகி வரும் வனிதா விஜயகுமார் நடித்த எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.