ஜலபுலஜங்கு பாடலுக்கு வரவேற்பு
ADDED : 1390 days ago
டாக்டர் படத்தை அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா ,சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் டான். கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜலபுலஜங்கு என்று தொடங்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. டங்காமாரி ஊதாரி, ஆலுமா டோலுமா பாடல்கள் எழுதிய ரோகேஷ் இந்த பாடலை எழுத, அனிருத் பாடியிருக்கிறார். பாடல் வெளியான 24 மணிநேரத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. எனர்ஜிடிக்கான இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலானது.