2022 எனக்கான ஆண்டு : ரகுல் பிரீத் சிங்
ADDED : 1388 days ago
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கைவசம் எட்டு படங்களுக்கு மேல் வைத்துள்ளார். இதில் ஹிந்தியில் மட்டும் ஆறு படங்களில் நடித்து வருகிறார்.
அதில் ஜான் ஆப்ரஹாமுடன் இணைந்து நடித்துள்ள அட்டாக், அஜய் தேவ்கன் டைரக்சனில் நடித்து வரும் ரன்வே 34, ஆயுஷ்மான் குரானாவுடன் நடித்து வரும் டாக்டர் ஜி மற்றும் மிஷன் சின்ட்ரெல்லா என நான்கு படங்கள் வரும் 2022ல் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இதுபற்றி ரகுல் பிரீத் சிங் கூறும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையுலகின் நிலைமையே மாறிப்போய் இருந்தது.. தற்போது மீண்டும் வழக்கமான இயக்கத்திற்கு வந்துள்ளது. எனது நான்கு படங்கள் 2022ல் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் அடுத்த ஆண்டு எனக்கான ஆண்டாக இருக்கும்” என்றார்.