உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பட்டிமன்ற பேச்சாளர் ஆயிட்டேன் - வீஜே மணிமேகலையின் அசத்தல் அப்டேட்

பட்டிமன்ற பேச்சாளர் ஆயிட்டேன் - வீஜே மணிமேகலையின் அசத்தல் அப்டேட்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பளினியாக வலம் வருகிறார் மணிமேகலை. சமீப காலங்களில் பட்டிமன்றங்களில் பேச்சாளராக பங்கெடுத்து வருகிறார். அவரது இந்த புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு விஜய் டிவியில் நடைபெற உள்ள சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் வீஜே மணிமகேலை பங்கேற்கிறார். இது குறித்து தனது சமூகவலைதளத்தில் அப்டேட் வெளியிட்டுள்ள மணிமேகலை, பட்டிமன்றத்திற்காக தான் தீவிரமாய் பேசுவது போல் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மணிமேகலை முன்னதாக முனைவர் கு.ஞானசம்பந்தம் மற்றும் கலக்கப்போவது யாரு புகழ் மதுரை முத்து ஆகியோர்களின் தலைமையில் சில பட்டிமன்றங்களில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !