ஈரமான ரோஜாவே சீசன் 2 கதாநாயகனாகிறார் சித்தார்த் குமரன்
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'ரெக்க கட்டி பறக்குது மனசு' தொடரின் மூலம் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் சித்தார்த் குமரன். தொடர்ந்து 'தேன்மொழி பி.ஏ' தொடரிலும் சிறப்பாக நடித்திருந்தார். அவர் தற்போது விஜய் டிவியில் புதிய பரிமாணத்தில் வெளியாகவுள்ள 'ஈரமான ரோஜாவே' சீசன்2-வில் கதநாயகனாக நடிக்கிறார்.
'ஈரமான ரோஜாவே' சீசன் 2 குறித்தும் அதில் கேப்ரில்லா சார்ல்டன் ஹீரோயினாக நடிக்கிறார் எனவும் சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது சீரியலின் கதநாயகனாக சித்தார்த் குமரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால், இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கடந்த 2018ல் தொடங்கி 3 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே தொடர், ஆகஸ்ட் மாதத்தில் வெற்றி விழா கொண்டாட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இரண்டாவது சீசனுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.