உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆராட்டு டப்பிங்கை முடித்த மோகன்லால்

ஆராட்டு டப்பிங்கை முடித்த மோகன்லால்

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவான மரைக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம் படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து மோகன்லாலின் இன்னொரு ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கி வரும் ஆராட்டு படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் நெய்யாற்றின்கரை கோபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் டுவல்த் மேன், பிரித்விராஜ் இயக்கத்தில் புரோ டாடி, ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அலோன் ஆகிய படங்களிலும் மோகன்லால் நடித்து முடித்துவிட்டார். இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் முன்னதாகவே தொடங்கப்பட்ட ஆராட்டு படத்தை முதலில் ரிலீஸ் செய்ய விரும்பும் மோகன்லால், அந்தப்படத்தின் டப்பிங் பணிகளை தற்போது முடித்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்படிகம், நரசிம்மம் படங்களின் பாணியில் இந்தப்படம் உருவாகியுள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !