முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடிக்கும் பிரேம்
ADDED : 1383 days ago
தமிழ் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களாக குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரேம்.. பிரியாணி, சர்க்கார், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரேம், தான் நடித்த பல படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், க்ளைமாக்ஸில் திடீர் வில்லனாக அவதாரம் எடுப்பவராகவும் தான் அதிக அளவில் நடித்துள்ளார். தற்போதும் கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார் பிரேம்.
இந்தநிலையில் முதன்முறையாக வாஸ்கோடகாமா என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் பிரேம்.. நகுல் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை ஆர்ஜி கிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார். குணச்சித்திர நடிகர்கள் இரட்டை வேடங்களில் நடிப்பது அபூர்வமான விஷயம்.. அந்த வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பது பெருமையான ஒன்று என கூறும் பிரேம், அந்த கதாபாத்திரங்கள் குறித்து இப்போது எதுவும் என்னால் சொல்லமுடியாது என கூறியுள்ளார்.