உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதையும் யோசிக்காதீங்க, நல்லதே நடக்கும் : திருச்சியில் சிவகார்த்திகேயன் பேச்சு

எதையும் யோசிக்காதீங்க, நல்லதே நடக்கும் : திருச்சியில் சிவகார்த்திகேயன் பேச்சு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள ‛பராசக்தி' படம் நாளை ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனநாயகன் படம் போன்று இப்படம் தணிக்கை சிக்கலில் உள்ளதால் பட வெளியீட்டில் சிக்கல் நீடிக்கிறது. இதனிடையே பராசக்தி படத்தின் கண்காட்சி திறப்பு விழா திருச்சியில் நடந்தது.

அதில் பேசிய சிவகார்த்திகேயன் : 1965ல் இந்த கதை நடக்கிறது. நம்ம மண், மொழிக்காக உயிரை விட்டவர்களின் உண்மை கதை. அதனால்தான் இவ்வளவு நடிகர்கள் இதில் நடித்தாங்க. தம்பி துரை என்ற என் தம்பியாக அதர்வா நடித்துள்ளார். அவரு இப்ப என் உண்மையான தம்பி ஆகிட்டாரு. மாணவர்கள் புரட்சி பற்றிய கதையை இந்த படம் பேசுகிறது. ரத்னமாலா என்ற அந்த மாதிரி புரட்சி பெண்ணாக ஸ்ரீலீலா நடித்து இருக்காங்க. என் பாயின்ட் ஆப் வியூவில ரவிமோகன் வில்லன், அவர் பாயிண்ட் ஆப் வியூவில நான் வில்லன். அவர் 35 படங்களில் ஹீரோவாக, நடித்தவரு, இதுல பவர் புல் வில்லனாக நடித்து இருக்கிறார். அவர் ஸ்டைலிஷ் வில்லன் இல்லை. இது கொடூர வில்லன். இது ஜி.வி.பிரகாஷ் 100வது படம். எங்களை ஒருங்கிணைத்து இருக்காங்க டைரக்டர் சுதா.

இந்த மண், மக்களும் ஹீரோ. அவங்களுக்கு வணக்கம் செலுத்துகிற கதை. பெரியவர்கள் நம் கதையை மாணவர்கள், இளைஞர்களுக்கு சொல்லணும். மீதியை படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க என்றார். இந்த பட ரிலீசில் டென்சன் இருக்குமா என்ற கேள்விக்கு, ஒவ்வொரு படத்துக்கு ஒருவித டென்ஷன் இருக்கும். மக்கள் பார்த்திட்டு என்ன சொல்ல போறாங்கனு நினைப்போம். நம்ம இன்டன்ட், கன்டன்ட் நல்லா இருந்தால் படம் ஹிட்டாகும். இந்த படத்தை மக்கள் ரசிப்பாங்க.



இப்ப நெகட்டிவிட்டியை எப்படி தவிர்க்கணும்னு கேட்குறாங்க. அதை இக்னோர் பண்ணிட வேண்டும். சில சோஷியல் மீடியாவில் தவறான தகவல் பரவது. நல்ல விஷயங்கள் மரம் மாதிரி மெதுவாக பரவும். மரம் நல்ல விஷயங்களை தரும். நல்லதை கொடுங்க என்றவர், நான் பராசக்தி ஹீரோடா? பெயரை கேட்டால் அதிருதில்லல என்றார். எல்லாரும் சேர்ந்து ஓடுவோம், சேர்ந்து ஜெயிப்போம். கவலை இருந்தால் எதையும் யோசிக்காதீங்க. நல்லதே நடக்கும், நல்லதே நடக்கும்'' என்றார்.

ஸ்ரீலீலா
நான் இரண்டாவது முறை திருச்சி வர்றேன். ஜனவரி 10ம் தேதி பராசக்தி ரிலீஸ் ஆகுது. படம் பாருங்க. இந்த படத்துல எனக்கு ஸ்ட்ராங் ஆன கேரக்டர். நான் கூட இப்படிப்பட்ட கேரக்டரை முதல் தடவை பண்ணியிருக்கிறேன். இது படத்துல நான் ரெபல் தான். ஆனால், ஸ்வீட் கேரக்டர். இந்த படத்துல சுதா மேடம் சீரியஸ் ஆக இருப்பார். எஸ்.கே நல்லா சாப்பிடுவாரு. நான் செட்டுக்கு வந்தால் வைப் ஆகிடும். இந்த படத்துல பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ட் ரவி மோகன், கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட் அதர்வா.



அதர்வா
நான் இப்ப திருச்சிகாரங்களுடன் அதிகம் வொர்க் பண்ணுறேன். சிவகார்த்திகேயன் கூட திருச்சிகாரரு. இங்கே வந்தால் தனி எனர்ஜி கிடைக்குது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போவது, மெஸ் போவது அடிக்கடி நடக்குது. நானும் திருச்சி பையனாக மாறிவிட்டேன். பராசக்தி பார்க்கப்போறீங்க. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இப்படி நடக்கும். ஸ்ரீலீலா முதல் படம், ரவி மோகன் முதல்ல நெகட்டிவ்வாக வர்றாரு, சிவகார்த்திகேயன் 25வது படம், ஜி.வி.பிரகாசின் 100வது படம். இந்த படத்துல நான் இருப்பது மகிழ்ச்சி.

ரவிமோகன்
என் அம்மா வளர்ந்த ஊர் திருச்சி, அவுங்ககிட்ட இருந்து நிறைய நல்ல குணங்களை கற்று இருக்கிறேன். என்னுடைய புது அவதார் ஆக பராசக்தி இருக்கும். நல்ல பண்ணியிருக்கீங்க என சிவகார்த்திகேயன் பாராட்டினார். முதல் தடவை இப்படி ரோல் பண்ணும்போது வித்தியாசமாக இருக்கும். நீங்களும் படம் பார்த்து சொல்லிட்டால் நான் சந்தோஷப்படுவேன். இந்த படத்தை ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தோம். கரியில படுத்து இருப்போம், ரயிலில் சண்டை போடுவோம், இலங்கையில் இருப்போம். தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், மீண்டும் வந்து ஒளிப்பதிவு செய்தார் ரவி கே சந்திரன். இந்த படம் புது காம்போவாக இருக்குது. என்னை ரொமான்டிக் ஹீரோனு சொல்வாங்க. அடுத்து இந்த டைட்டில் அதர்வாவுக்கு போகும். ஜனவரி 10 படம் வெளி வரும். தியேட்டர்ல போய் பாருங்க.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

Prasanna Krishnan R
2026-01-09 15:57:07

This movie gonna flop and I'm sure this fellow will become another Vadivelu.


Rock
2026-01-09 13:48:00

onlinela freeya pathukuren


sankar, Nellai
2026-01-09 13:11:21

திமுககாரன் நீ சொல்வதை நாங்க கேட்கணுமா தம்பி