ராக்கி-க்காக நயன்தாராவின் ரத்தம் சொட்டும் புரோமோ
ADDED : 1385 days ago
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் காலம் ஒரு துரோகி என்று புரமோசன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ரத்தம் சொட்ட சொட்ட நயன்தாரா நடித்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் டிசம்பர் 23ல் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்ற போதும் தனது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் இதன் புரோமோ வீடியோவில் அவர் நடித்திருக்கிறார். மேலும் தற்போது நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல், ஆக்சிஜன், கனெக்ட் என தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.