ஹே சினாமிகா படம் ரிலீஸ் எப்போது?
ADDED : 1386 days ago
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழில் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கும் முதல் படமான ஹே சினாமிகா என்ற படத்தில் நடித்து வந்தார். அவருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்பட பலர் நடிக்க, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் . இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஹா சினாமிகா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.