உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெங்கட் பிரபுவின் அடுத்த படம்

வெங்கட் பிரபுவின் அடுத்த படம்

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.சூர்யா. சூர்யா உள்பட பலர் நடித்த மாநாடு படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அந்த படத்தின் வெற்றியை அடுத்து ரஜினியிடம் கதை சொல்லியிருப்பதாக கூட சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இது குறித்த அவர் உறுதிப்படுத்தவில்லை. இப்படியான நிலையில் வெங்கட் பிரபு தற்போது தனது பிளாக் டிக்கெட் மற்றும் ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !