ஹீரோவாகும் விஷ்ணு விஷால் தம்பி
ADDED : 1389 days ago
தமிழில் வளர்ந்து வரும் நாயகன் விஷ்ணு விஷால். தயாரிப்பாளராகவும் வலம் வரும் இவரது நடிப்பில் ‛எப்ஐஆர், மோகன்தாஸ்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் இவரது தம்பி ருத்ராவும் நாயகனாக களமிறங்க உள்ளார்.
இதுப்பற்றி விஷ்ணு விஷால் கூறுகையில், ‛‛2022ல் என் படங்கள் வெளியாவது மட்டும் எனக்கு ஸ்பெஷல் அல்ல. எனது தம்பியையும் சினிமாவில் அறிமுகம் செய்கிறோம். அவரை நல்ல கதையில் அறிமுகம் செய்ய காத்திருக்கிறோம். நல்ல கதை உள்ளவர்கள் எங்களை அணுகலாம்'' என்கிறார் விஷ்ணு விஷால்.