‛பிளட் மணி' ரசிகர்களை கவரும் - பிரியா பவானி சங்கர்
ADDED : 1389 days ago
தற்போது ருத்ரன், யானை, பத்து தல , திருச்சிற்றம்பலம், இந்தியன்-2 என் பத்து படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி ஷங்கர். இதில் சர்ஜுன் என்பவரது இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் பிளாட் மணி. இந்த படம் குவைத் நாட்டில் கொலை வழக்கில் சிக்க வைக்கப்படும் இரண்டு தமிழர்களை ஒரு செய்தி நிறுவனம் எப்படி காப்பாற்றுகிறது என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை ஜீ 5 என்ற இணையதளத்தில் டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.
இந்த படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர், இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் கதையாக சொல்லி இருக்கும் விதம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என்று கூறினார்.