உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்ஆர்ஆர் - நான்காவது பாடல் நாளை வெளியாகிறது

ஆர்ஆர்ஆர் - நான்காவது பாடல் நாளை வெளியாகிறது

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் வருகிற ஜனவரி 7ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் நான்காவது பாடலான ரிவோல்ட் ஆப் பீம் என்ற பாடலை நாளை(டிச., 24) வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை 11.30 மணிக்கு அந்த பாடலின் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை படத்தின் இசை அமைப்பாளர் கீரவாணியின் மகன் காலபைரவா பாடியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !