காமாக்கியா கோவிலில் தரிசனம் செய்த அமலாபால்
ஆடை படத்திற்கு பிறகு அமலாபால் நடிப்பில் வேறு படம் எதுவும் ரிலீசாகவில்லை. அதேசமயம் தனது கவனத்தை வெப்சீரிஸ் பக்கம் திருப்பிய அமலாபால் தெலுங்கில் குடி ஏடமைதே என்கிற வெப் சீரிஸில் நடித்தார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது தனது கிளமார் போட்டோக்களையும், பயண வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்கியா கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு வந்துள்ள அமலாபால் நெற்றி நிறைய குங்குமத்துடன் கழுத்தில் பெரிய மாலையுடன் காட்சியளிக்கும் தனது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி கூறியுள்ள அமலாபால், “அசாமில் நீலாச்சல் மலையில் அமைந்துள்ள காமாக்கியா தேவியை தரிசித்தேன்... பெண்களின் சக்தியின் அம்சமாக இந்த கோவிலுக்குள் சென்றபோது அதன் சக்தியை என்னால் உணரமுடிந்தது.. நானாகவே எனக்குள் ஒரு தாய்மை உணர்வை கொடுத்துக்கொண்டு, அப்படியே எனக்குள் ஒரு குழந்தை இருப்பது போன்ற உணர்வுடன் திரும்பி வந்தேன்” என தத்துவார்த்தமாக கூறியுள்ளார்.