தமிழில் வெளிவருகிறது ஐயர்ன் மாஸ்க்
ADDED : 1492 days ago
கடந்த ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படம் அயர்ன் மாஸ்க். இதில் அர்னால்ட், ஜாக்கிசான் இணைந்து நடித்திருந்தார்கள். இவர்களுடன் ஜேசன் பிளம்மிங், அன்னா சூரினா உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு பேண்டசி திரைப்படம். ஓலக் ஸ்டெப்செங்கோ இயக்கி இருந்தார். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த படம் இந்தியாவில் வெளிவரவில்லை.
சைனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த இப்படம் தற்போது தமிழில் வெளிவருகிறது. டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சீனா செல்கிறார். ஜாக்கி சானை அர்னால்ட் முதலில் துரத்துகிறார். பிறகு இருவரும் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் படுபயங்கரமாக மோதுகிறார்கள். இருவரும் இணைந்து டிராகனை அழித்தார்களா, மகாராணியை காப்பாற்றினார்களா என்பதே கதை. ஹன்சா பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது.