அனுஷ்காவின் புதிய பட தகவல்
ADDED : 1396 days ago
நிசப்தம் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை அனுஷ்கா. ஆனால் தெலுங்கு நடிகர் நவீன் பொலி ஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா ஒரு படத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனபோதிலும் லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள். இந்த நிலையில் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதோடு அனுஷ்காவுக்கு தற்போது வயது 40, நவீனுக்கு 32 . அதனால் இந்த படத்தில் இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. மாறுபட்ட கேரக்டர்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.