உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கனவை நனவாக்கிய யுவன் : சந்தோஷத்தில் ஹிப் ஹாப் ஆதி

கனவை நனவாக்கிய யுவன் : சந்தோஷத்தில் ஹிப் ஹாப் ஆதி

முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும் மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் நட்புக்காக பாடல்களை பாடி கொடுப்பது யுவன் சங்கர் ராஜாவின் வழக்கம். அந்தவகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறிய ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள அன்பறிவு படத்தில் அரக்கியே என்கிற பாடலை பாடியுள்ளார் யுவன். சமீபத்தில் இந்தப்பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது. அஸ்வின் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் ஜன-7ஆம் தேதி ஒடிடியில் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில் யுவன்சங்கர் ராஜா தனது படத்தில் பாடியது குறித்து தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. “பள்ளி நாட்களில் யுவனின் மிக தீவிரமான ரசிகர்களில் ஒருவராக இருந்தேன்.. இன்று நான் நடித்துள்ள படத்தில் எனக்காக அவரே பாடியுள்ளார். கனவு நனவான தருணம் இது” என கூறியுள்ள ஆதி, யுவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !