மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாடிய யோகிபாபு
ADDED : 1379 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும், பல படங்களில் கதையின் நாயகனாகவும் வலம் வருகிறார் யோகி பாபு. மஞ்சு பார்கவியை திருமணம் செய்த நடிகர் யோகிபாபுவுக்கு கடந்தாண்டு டிசம்பரில் மகன் பிறந்தான். தீவிர முருக பக்தரான யோகிபாபு, மகனுக்கு விசாகன் என பெயரிட்டார். சமீபத்தில் மகனின் முதல் பிறந்தநாளை யோகிபாபு விமரிசையாக கொண்டாடினார். இதில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவுக்கு சுந்தர்.சி குடும்பத்துடனும், உதயநிதி, மாரிசெல்வராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் யோகி பாபு.