மூத்த மலையாள நடிகர் ஜிகே பிள்ளை மறைவு
ADDED : 1377 days ago
மலையாள திரையுலகின் பழம்பெரும் மூத்த நடிகரான ஜிகே பிள்ளை இன்று(டிச., 31) காலமானார் அவருக்கு வயது 97. கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இவரது மனைவியும் காலமானார். இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். சினிமாவில் நுழைவதற்கு முன் ராணுவத்திலும் கப்பற்படையிலும் இவர் பணிபுரிந்துள்ளார்.
மலையாளத்தில் 1957ல் சிநேகசீமா என்கிற படத்தில் நடிகராக அறிமுகமான இவர் இதுவரை சுமார் 325 படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மலையாளத்தில் நடித்த தச்சோளி அம்பு என்கிற படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் ஜிகே பிள்ளை.
பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து பெயர் பெற்ற ஜிகே பிள்ளை தொலைக்காட்சியில் கடமட்டத்து கத்தனார் என்கிற தொடரில் கர்னல் ஜெகநாத வர்மா கதாபாத்திரத்தில் நடித்து ஒவ்வொரு வீட்டுக்கும் ரொம்பவே நெருக்கமான ஒருவராக மாறினார்.